தமிழக இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? நாளை சிபிஎம் அவசரக் கூட்டம்!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து சிபிஎம் மாநிலக் குழு கூட்டம்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்வதற்கு நாளை (செப். 13) மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனி சட்டப்பேரவைத் தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆளுங்கட்சியான தவெக சார்பில் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இத்துடன், எதிர்க்கட்சியான திமுக சார்பில் ஐ. பரந்தாமன் (மதுராந்தகம்) மற்றும் எஸ். சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இடதுசாரிகளின் ஆதரவு யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள சூழலில், இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடக்கவிருக்கும் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என மாநிலச் செயலர் பெ. சண்முகம் இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து முக்கிய அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், கட்சியின் மாநிலக் குழுவைக் கூட்டி மாநிலக் குழுவின் ஒப்புதலோடு இதற்கான முடிவு என்பது மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் குறித்து நாளை காலை 10.30 மணியளவில் திருச்சியில் அவசர மாநிலக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைவதற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
CPIM state committee will be held tomorrow regarding the Maduranthakam and Dharapuram Assembly by-elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.