FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு பற்றி...

7 செப்டம்பர் 2026, 5:51 pm IST
தமிழக தேர்தல்... - DIN
பகிர்:

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

Advertisement

Advertisement

இத்துடன் முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

இதனால் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக். 6 ஆம் தேதி இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் - செப். 9

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 17

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19

வாக்கு எண்ணிக்கை - அக். 9 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

summary

By-election announced for Maduranthakam and Dharapuram constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments