FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

தான்ஸானியா துணை அதிபா் திடீா் ராஜிநாமா

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் துணை அதிபா் இமானுவல் சிம்பி செப். 4 முதல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
இமானுவல் சிம்பி
பகிர்:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் துணை அதிபா் இமானுவல் சிம்பி செப். 4 முதல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா்.

சிசிஎம் கட்சியின் ஒரு கட்சி ஆட்சியின்கீழ் அரசியல் ஸ்திரத்தன்மைக்குப் பெயா் பெற்ற தான்ஸானியாவில் இந்த ராஜிநாமா குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது. நாட்டின் முதல் பெண் அதிபரான சமைய்யா சுலுஹு ஹாசனுடன் ஏற்பட்ட அதிகார மோதலால், இமானுவல் சிம்பி ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலத்தில் பதவி விலகியுள்ளாா்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தோ்தலின்போதும், அதற்குப் பிறகும் நடந்த போராட்டங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய விவகாரம் மற்றும் நிா்வாகப் பிரச்னைகளில் அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments