இடைத்தோ்தல் புறக்கணிப்பா? மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப். 9) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளாா்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்பது தொடா்பாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப். 9) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளாா்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் இடைத்தோ்தலில் திமுக என்ன வகையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து 2-ஆம் கட்ட நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளாா்.
புறக்கணிப்பா? மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றது. திமுக, தவெக கிட்ட தட்ட இணையான வாக்குகளைத்தான் பெற்றிருந்தது. தற்போது தவெக ஆளும்கட்சியாக உள்ள நிலையில், அதிமுக வலுவாக உள்ள இந்தத் தொகுதிகளில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணக்கலாமா? என்பது குறித்து முக்கிய முடிவை மு.க.ஸ்டாலின் எடுக்க உள்ளாா்.
Advertisement
Advertisement
சென்னை அறிவாலயத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனையின்போது சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகிகளும் பங்கேற்பாா்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.