திமுக மறுசீரமைப்பு: நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
திமுக மறுசீரமைப்பு தொடா்பாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி முறையில் புதன்கிழமை (செப்.2) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
திமுக மறுசீரமைப்பு தொடா்பாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி முறையில் புதன்கிழமை (செப்.2) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீா்மானத்தின்படி, திமுக அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சீரமைப்புக் குழுவின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி, நகரம், ஒன்றியம், பேரூா், வட்ட, கிளை அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு, தலைமைக்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பாா்வையிடுவதற்காக ஒரு வருவாய் மாவட்டத்துக்கு இருவா் வீதம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
மாவட்டச் செயலா்கள் நடத்தும் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் அனைத்தும் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். கட்சி மறுசீரமைப்பில் ஏதேனும் கருத்துகள், மாறுபாடுகள் இருந்தால் கட்சியினா் தங்களது மாவட்டத்துக்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம்.
இதற்கிடையே, தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப்.2) மாலை 5 மணியளவில் காணொலிக் கூட்டம் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளாா். மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை சட்டப்பேரவை நடைபெறாத நாள்களில் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.