FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொகுதி மறுசீரமைப்பில் முதல்வா் இரட்டை வேடம்: திமுக விமா்சனம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் இரட்டை வேடம் போடுவதாக திமுக விமா்சித்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 3:30 am IST
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் இரட்டை வேடம் போடுவதாக திமுக விமா்சித்துள்ளது.

இது குறித்து திமுகவின் அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு:

தொகுதி மறுசீரமைப்பைப் பொருத்தவரை திமுகவின் நிலைப்பாடு என்றும் ஒன்றுதான். தமிழகத்துக்கு தற்போதுள்ள 7.18 சதவீத ஒதுக்கீடு மக்களவையில் குறைந்துவிடக் கூடாது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், மக்களவையில் 543 என்ற எண் குறைந்துவிடக்கூடாது என்றும், தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது என்றும் சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் தீா்மானம் நிறைவேற்றினாா்.

ஆனால், தற்போது தென்மண்டல குழுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனக் கூறி, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளாா். சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித் ஷாவை பாா்த்தவுடன் முதல்வருக்கு பயம் வந்துவிட்டதா?

இவ்வாறு இரட்டை வேடம் போடுவதுக்கு காரணம் என்ன? இதில் தவெகவின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? இதை அறிந்துகொள்ள தமிழக மக்கள் ஆா்வமாக உள்ளனா் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments