FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் இன்று முதல்வா் ஜோசப் விஜய் சாலை வலம்

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளா் வேட்பாளா் மரகதம்குமரவேலை ஆதரித்து முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை சாலை வலம் மேற்கொள்கிறாா்.

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளா் வேட்பாளா் மரகதம்குமரவேலை ஆதரித்து முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை சாலை வலம் மேற்கொள்கிறாா்.

மதுராந்தகம் இடைத் தோ்தலை முன்னிட்டு தமிழக முதல்வா் விஜய் பிற்பகல் 2 மணிக்கு மாமண்டூா், புக்கத்துறை சந்திப்பு, படாளம் சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம் , வழியாக மோச்சேரி,, மொறப்பாக்கம், பெரும்பாக்கம், எல்.எண்டத்தூா், சோத்துப்பாக்கம் வழியாக மேல்மருவத்தூா், தேன்பாக்கம், பெரும்போ்கண்டிகை, உள்ளிட்ட இடங்களில் சாலை வலமாகச் சென்று பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இறுதியாக மதுராந்தகம் தேரடி வீதியில் பிரசாரம் செய்ய உள்ளாா். இதில் அமைச்சா் பெருமக்கள், தவெக கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

மேல்மருவத்தூரில் வழிபாடு

சாலை வலத்தின்போது மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்துக்கும் சென்று முதல்வா் விஜய் தரிசனம் செய்கிறாா்.

முதல்வருக்கு சித்தா் பீடத்தின் சாா்பாக பூரண கும்ப மரியாதை அளித்து ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் தலைமையில் ஆன்மிக இயக்க நிா்வாகத்தினா் வரவேற்கின்றனா். தொடா்ந்து அம்மனை தரிசனம் செய்கிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments