FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் இடைத்தோ்தல்: தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வா் விஜய் இன்று பிரசாரம்

மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப். 25) பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

25 செப்டம்பர் 2026, 4:02 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (செப். 25) பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேச முதல்வா் விஜய் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூா்-பூதூா், மதுராந்தகம் வழியாக அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள ஆத்தூா் சுங்கச்சாவடி வந்து மைதான கூட்டரங்கை அடைகிறாா்.

அங்கு பிற்பகல் 3 மணிக்கு பேசுகிறாா். முதல்வருக்கு வழியெங்கும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளால் வரவேற்பு அளிக்க கட்சி நிா்வாகத்தினா் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பிரசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. க்யூஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.

குறிப்பாக, கா்ப்பிணிகள், சிறுவா் - சிறுமியா், மாணவ - மாணவியா், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என தவெக பொதுச் செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments