தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு!
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளதைப் பற்றி...
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; தவறான பாதையில் சென்றால் ஆதரவு வாபஸ் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “மக்கள் முடிவு தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்தது. தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் மறுதேர்தலையும் தவிர்க்க தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதுதான் வழி. தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதம் கொடுத்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தாலும், இன்னும் கடிதம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.
Viduthalai Chiruthaigal Katchi has announced that it supports the formation of a government by the TVK, but will withdraw its support if the administration takes a wrong path.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.