விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அந்த இருவர் யார்?
விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற இருவர் யார், அவர்கள் விஜய்யுடன் சென்றது ஏன்? என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற இருவர் யார், அவர்கள் விஜய்யுடன் சென்றது ஏன்? என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கோரியிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவும், விசிக மின்னஞ்சல் முகவரியில் கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தவெக 108, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், விசிக தலா 2 எம்.எல்.ஏக்கள் என 118 பேருடன் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தவெக தலைவர் விஜய் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், விஜய் பதவியேற்பதற்கான ஆளுநர் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை.
இந்த நிலையில், ஆளுநரைச் சந்திக்க சென்றபோது விஜய் பெரும்பான்மை இருப்பதாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார்.
அப்போது அவருடன் கட்சிக்குத் தொடர்பில்லாத இவர் உடனிருந்தனர். அவர்கள் யார்? என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
அந்த இருவரில் கண்ணாடி அணிந்து குடுமி போட்டிருந்தவர் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் என்றும், அவர் அருகில் மற்றொருவர் கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி என்றும் கூறப்படுகிறது.
கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கிரானைட் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஷீரடி சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்யும் போது விஷ்ணு ரெட்டி, அவரது மனைவி நேத்ரா ரெட்டி மற்றும் மகள் நேஹா ரெட்டியுடன் சென்றிருந்தார்.
தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, விஜய்யின் மிக நெருங்கிய நண்பர் என்றும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
two individuals who accompanied Vijay to the Governor's House, as well as the reasons behind their accompanying him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.