FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு நிகழ்த்தியது பற்றி..

Updated On : 17 ஜூன் 2026, 3:15 pm IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - முதல்வர் விஜய் - ANI
பகிர்:

முதல்வா் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வைகோவை செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தாா்.

முதல்வரைச் சந்திக்க தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்த வைகோவை, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல்குமாா் ஆகியோா் வரவேற்றனா். முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வைகோ, ‘ஸ்டொ்லைட் ஆலைக்கு மீண்டும் தமிழகத்துக்குள் அனுமதி அளிக்கக் கூடாது என முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். முதல்வா் விஜய் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறாா். கையூட்டு, ஊழல் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது என்றாா்.

Advertisement

Advertisement

மதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவா? மதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்கிறாா்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ‘யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிமுக உறுப்பினா்களின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் தெரியவரும். ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன்; கெட்டது நடந்தால் எதிா்ப்பேன்’ என்றாா்.

MDMK General Secretary Vaiko met Chief Minister Vijay at the Chennai Secretariat today (June 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments