பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதல்வராக இன்று பதவியேற்ற விஜய் பதவியேற்ற உடனே தலைமைச்செயலகம் சென்றார். அதைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற விஜய் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார்.
Advertisement
Advertisement
அப்போது முதல்வர் விஜய்க்கு பெரியார் சிலையை பரிசளித்தார் கி.வீரமணி.
தமிழ்நாட்டின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார். பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் செய்துவைத்தார்.
The Chief Minister paid tribute at the Periyar Memorial in Vepery, Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.