மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!
திமுக தலைவரை முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளது பற்றி...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, இன்று காலை கூடிய தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா முடிந்தவுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய், மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கவுள்ளார்.
தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டுக்கும் நேரில் செல்லும் விஜய், அவரிடமும் வாழ்த்து பெறவுள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதுடன் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய விஜய், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Joseph Vijay Meets DMK leader M.K. Stalin!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.