முகப்பு
மேற்கு வங்கம்

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு அமித் ஷா எச்சரிக்கை விடுத்தது பற்றி...

Updated On : 21 ஏப்ரல் 2026, 5:05 pm IST
உள்துறை அமைச்சர் அமித் ஷா - PTI
பகிர்:

மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம் என்று திரிணமூல் காங்கிரஸுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது.

இந்த நிலையில், டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா பேசியதாவது:

Advertisement

Advertisement

”திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்களும், சமூக விரோதிகளும் உங்கள் காதுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளர்களுக்கு தொந்தரவு விளைவித்தால், மே 5-க்கு பிறகு உங்களை தலைகீழாக தொங்கவிடுவோம். இல்லையெனில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க நேரிடும்.” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ”காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் நீண்ட நாள்களாகவே கோர்க்கா சகோதரர்களை வஞ்சித்து வருகிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் மலைப்பகுதிக்கு வருகை தந்து வருகிறேன். நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு காண்போம்.

மமதா பானர்ஜி அரசின் பழங்குடியினர் மேம்பாடு, மலைப்பகுதிகள் மற்றும் வடக்கு வங்கத்துக்கான பட்ஜெட் ரூ. 2,000 கோடியாகும். ஆனால், மதரஸாக்கள் மற்றும் முஸ்லிம்களுக்காக ரூ. 5,700 கோடியை மமதா அரசு ஒதுக்கியுள்ளது.” என்றார்.

இதனைத் தொடர்ந்து மேற்கு வர்தமான் தொகுதியில் பேசிய அமித் ஷா, “தேர்தல் முடிந்தவுடன் தனது மருமகனை மமதா முதல்வராக்கப் போகிறார். ஆனால் உங்கள் கனவு ஒருபோதும் நனவாகாது. உங்கள் மருமகன் ஒருபோதும் முதலமைச்சராக ஆகமாட்டார்.

பாஜக வெற்றி பெற்றால் வெளியாட்கள் முதல்வராவார் என்று தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தின் முதல்வராக இம்மாநிலத்தில் பிறந்த, வங்க மொழியிலேயே கல்வி பயின்ற ஒருவரைதான் முதல்வராக்குவோம் என்பதை தெளிவுபடுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

summary

If voters are harassed, we will hang them upside down! Amit Shah warns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments