முகப்பு
மேற்கு வங்கம்

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்கு வங்க முதல்வர் பதவியிருந்து மமதா பானர்ஜி விலக மறுத்திருந்த நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளதைப் பற்றி...

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மமதா பானர்ஜி. - படம்: எக்ஸ்.
பகிர்:

முதல்வர் பதவியிருந்து மமதா பானர்ஜி விலக மறுத்திருந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி திடீரென தெரிவித்தார்.

Advertisement

Advertisement

நாளை மறுநாள் (மே 9-ஆம் தேதி) பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவித்த நிலையில், மம்தா பானர்ஜியின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 174 (2)(பி)-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கு வங்க அமைச்சரவையைக் கலைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை, இடைக்கால அரசுக்கான தலைமையை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசின் முன்னாள் செயலர் ஜவஹர் சிர்கார் கூறினார்.

summary

West Bengal Governor R.N Ravi officially dissolved the state legislative assembly and dismissed the cabinet to pave the way for the new assembly, days after the BJP swept the state winning more than 200 seats in the May 4 assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments