எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!
மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தால் ஆளுநர் வேண்டுகோள்...
பொதுப் போக்குவரத்து பயன்படுத்தி எரிபொருளைச் சேமிப்பது போன்ற பொறுப்பான தேர்வுகள் மூலம் நாட்டை வலுப்படுத்தப் பிரதமர் மோடியுடன் இணையுமாறு மேற்கு வங்க ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
மக்களின் தீவிரப் பங்கேற்பு மற்றும் தற்சார்பு மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் நாட்டை வலுப்படுத்தும் தேசிய கூட்டு முயற்சியில் பிரதமர் மோடியுடன் இணையுமாறு மேற்கு வங்க சகோதர சகோதரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
பொருளாதாரத்தை வலுப்படுத்த எரிபொருளைச் சேமித்து, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், தங்கம் வாங்குவதை ஒத்திவைத்தல், வெளிநாட்டுப் பயணம் தள்ளிப்போடுதல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மோடி மக்களை வலியுறுத்தினார்.
தேசிய வளப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கும் வகையில் சாத்தியமான இடங்களில் ஆன்லைன் கூட்டங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைகளை ஊக்குவிக்குமாறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் கூட்டு அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் பங்கேற்கும்போது ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும் தேசத்தைக் கட்டமைப்பதில் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.
நாட்டின் வலிமை மக்கள் பங்கேற்பில் அடங்கியுள்ளது. மேலும், வலியான, தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
West Bengal Governor R N Ravi on Thursday urged people of the state to join Prime Minister Narendra Modi in the collective endeavour to strengthen the country through "responsible choices" like conserving fuel, using public transport and moderating edible oil consumption.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.