முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை.. வேலை... வேலை...  பவர் கிரிட் நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி வேலை

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 54 டிப்ளமோ டிரெய்னி

Updated On : 18 ஏப்ரல் 2018, 2:37 pm IST
பகிர்:

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 54 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 54

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Diploma Trainee (Electrical) - 36
பணி: Diploma Trainee (Civil) - 11
பணி: Diploma Trainee (Electronics) - 02

Advertisement

Advertisement

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Jr. Officer Trainee (HR) - 04
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டு முழுநேர முதுகலை பட்டம், முதுகலை பட்டயம், மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, எம்எஸ்டபுள்யூ முடித்திருக்க வேண்டும்.

பணி: Chemist - 01
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

வயதுவரம்பு: 23.04.2018 தேதியின்படி 27 முதல் 30க்குள் இருக்க  வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. Chemist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://careers.powergrid.in/2018NerDtRectt/docs/ad.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.