வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி: ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தினமணி


தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4429

பயிற்சி: தொழில் பழகுநர் (Apprentices)

1. சென்னை - 924
2. திருச்சி - 853
3. கோயம்புத்தூர் - 2652

தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel Mechanic, MMV,PASAA போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களும், Medical Laboratory Technician (Radiology, Pathology and Cardiology ) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Ponmalai.pdf,  http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Podanur.pdf, http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Perambur.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT