வேலைவாய்ப்பு

உதவிப் பேராசிரியா் தோ்வு: பணி அனுபவச் சான்றுகளை கல்லூரிகள் விரைந்து அளிக்கவேண்டும் - கல்லூரி கல்வி இயக்குநரகம்

தினமணி

உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ள நிலையில், பணி அனுபவச் சான்றுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு அந்தச் சான்றை தாமதமின்றி வழங்கவேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள், முந்தைய உதவிப் பேராசிரியா் பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை பெற முடியும். 

விண்ணப்பதாரா்கள் பணி அனுபவத்துக்கானச் சான்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பெற்று, மண்டல கல்வி இணைய இயக்குநரிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், பணி அனுபவச் சான்று கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு, அதை விரைந்து அளிக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடா்பாக அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஆா். ராவணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு போலி பணி அனுபவச் சான்று அளித்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா் மீது மட்டுமின்றி, அதற்கு சான்றொப்பம் அளித்த அதிகாரி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதுபோன்ற பணி அனுபவச் சான்று அளிக்கும் கல்லூரிகள், தேவைப்பட்டால் அதனுடன் சான்றொப்பமிட்ட வருகைப் பதிவேடு நகல், ஊதிய பட்டியல் நகல் ஆகியவற்றையும் அளிக்கவேண்டும்.

மேலும், உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு குறித்த நேரத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக, பணி அனுபவச் சான்றை கல்லூரிகள் விரைந்து அளிக்க முன்வரவேண்டும் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT