டிஆர்டிஓவில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
Advertisement
Advertisement
பணி : Junior Research Fellow - 03
சம்பளம்: மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.
தகுதி : பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? | அரசு வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள admintbrl@tbrl.drdo.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2021
மேலும் விபரங்கள் அறிய www.drdo.gov.in அல்லது https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/JRF__Advt_TBRL_17.12.2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? | பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை: 5, 10, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.