தமிழக சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02/MRB/2022
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள் : 39
பணி: Village Health Nurses
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் மருத்துவச்சி, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்) படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவுச் செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி குறித்த திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.