இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 323 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 323 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் வரும் பிப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் விளையாட்டை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். விளையாட்டில் சிறந்து விளங்குவதும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைத் தயார்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். தனது நோக்கங்களை அடைவதற்காக, நாடு முழுவதும் பரவியுள்ள சர்வதேசத் தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களையும் கொண்டுள்ள இந்த அமைப்பு தற்போது 323 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 323 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் நாளை ஞாயிற்றுக்கிழமைக்குள் (பிப்.15) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
பணி: Assistant Coachers
காலியிடங்கள்: 323
விளையாட்டுத் துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
நீச்சல் – 26, தடகளம் – 28, சைக்கிள் ஓட்டுதல் – 12, ஜிம்னாஸ்டிக்ஸ் – 12, மல்யுத்தம் – 22, படகுப் போட்டி – 7, ஜூடோ – 6, துடுப்பு படகுப் போட்டி – 11, துப்பாக்கிச் சுடுதல் – 28, குத்துச்சண்டை – 19, வாள்வீச்சு - 11, பளுதூக்குதல் – 10, டேக்வாண்டோ – 11, வில்வித்தை – 12, டேபிள் டென்னிஸ் – 14, பூப்பந்து - 16, டென்னிஸ் – 8, கூடைப்பந்து – 12, வாலிபால் – 10, ஹாக்கி – 13, கால்பந்து – 12, கைபந்து – 6, கபடி – 6, கோ-கோ – 2, செபக் தக்ரா – 3, வுஷு – 6
சம்பளம்: இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.35,400 - 1,12,400 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு: இந்த பணியிடத்துக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது விளையாட்டு பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, விளையாட்டுத்துறை சாதனைகள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் ரூ.2000, இதர அனைத்து பிரிவினர் ரூ.2,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு https://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.2.2026
விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
SAI has initiated the process of direct recruitment of Assistant Coaches on regular basis across a wide range of sporting disciplines
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.