தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மைப் பயிற்சியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தேசிய உரத்தொழிற்சாலைகளில் 21 மேலாண்மைப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து...
தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தேசிய உரத்தொழிற்சாலைகளில் 21 மேலாண்மைப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், பி.எஸ்சி., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 01 (NFL)/2026
பணி: Management Trainee (MT)
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 21
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Management Trainee (Marketing) E-1 – 13
பணி: Management Trainee (F&A) E-1 – 3
பணி: Management Trainee (Materials) E-1 – 1
பணி: Management Trainee (Information Technology) E-1 – 1
பணி: Management Trainee (Electrical) E-1 – 2
பணி: Management Trainee (Chemical) E-1 – 1
வயது வரம்பு: 30.4.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், பி.எஸ்சி., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்ததிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2026
National Fertilizers Limited has officially announced a massive 2026 recruitment Notification to fill 21 Management Trainee E-1 vacancies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.