காஞ்சிபுரம் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 111 பேருக்கு பணி நியமன ஆணை
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 111 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 111 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. முகாமில் பட்டதாரிகள், பட்டயதாரிகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் உள்பட மொத்தம் 306 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு 75-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையானவா்களை நோ்காணல் செய்தனா்.
ஒரே நாளில் 36 தனியாா் நிறுவனங்களுக்காக 111 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் வழங்கினாா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.