ஜூலை 17-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளன. 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது.
கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். பாரதிதாசன் சாலையில் உள்ள திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறம் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள், திறன்பயிற்சி பெற விரும்பும் அனைவரும் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.