முகப்பு
வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி..?

சிஎஸ்ஐஆர்- ன் கீழ் செயல்பட்டு வரும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Updated On : 4 ஜூலை 2026, 8:24 am IST
மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐஜிஐபி) வேலை - ஐஜிஐபி
பகிர்:

சிஎஸ்ஐஆர்- ன் கீழ் செயல்பட்டு வரும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐஜிஐபி) என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஒரு முதன்மையான நிறுவனமாகும்; இது மரபியல் , மூலக்கூறு மருத்துவம், உயிரித் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புரதவியல் ஆகிய துறைகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் 'தொழில்நுட்ப வல்லுநர் (1)' பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதியுடைய, ஆற்றல்மிக்க, செயல் திறன் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026

Advertisement

Advertisement

பணியின் பெயர்: Technician (I)

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Computer Operator & Programming Assistant, Health safety & environment பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் . எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.igib.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

CSIR-IGIB invites the online applications from suitably qualified, dynamic, result-oriented and dedicated Indian citizens for the vacant posts of Technician (1) on direct recruitment basis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments