முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து..

Updated On : 19 ஜூன் 2026, 3:22 pm IST
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீசியன் பணி - இந்திய ரயில்வே
பகிர்:

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பி.இ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: (CEN) 02/2025

Advertisement

Advertisement

பணி: Technician Grade - I (Signal)

காலியிடங்கள்: 323

சம்பளம்: மாதம் ரூ.29,200

வயது வரம்பு: 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics, Computer Science,Information Technology,Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Physics, Electronics, Computer Science, Information Technology,Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician Grade - III

காலியிடங்கள்: 6,242

சம்பளம் : மாதம் ரூ.19,900

வயது வரம்பு : 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகளில் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

வயது வரம்பு: 1.7.2026 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. இடபுள்யுஎஸ், எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர்களுக்கு ரூ 250. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbapply.gov.in அல்லது www.rrbchennai.gov.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.7.2026

summary

The Railway Recruitment Board has released the RRB Technician...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments