விண்ணப்பித்துவிட்டீர்களா..?- மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னிக்கல் அலுவலர் வேலை!
மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னிக்கல் அலுவலர் வேலைக்கான அறிவிப்பு குறித்து...
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(சிஎஸ்ஐஆர்) , 1953-இல் பிலானியில் நிறுவப்பட்டது. இது மின்னணுவியல் துறையைச் சார்ந்த ஒரு முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மேம்பட்ட தகவல் தொழில்நுட்பக் குழு; பயன்பாட்டு மின்னணுவியல் குழு; வைர ஆராய்ச்சி குழு; உயர் அதிர்வெண் சாதனங்கள் மற்றும் அமைப்புகள் குழு; உயர் திறன் கொண்ட மைக்ரோவேவ் அமைப்புகள் குழு; நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் குழு; குறைக்கடத்தி செயல்முறை தொழில்நுட்பக் குழு; குறைக்கடத்தி உணரி மற்றும் நுண்-அமைப்புகள் குழு; சமூக மின்னணுவியல் குழு மற்றும் மற்றும் வெற்றிட மின்னணு சாதனங்கள் குழு ஆகிய பிரிவுகளில் இவை செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் சென்னை (தமிழ்நாடு) மற்றும் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) ஆகிய கிளைகளில் காலியாக உள்ள 2026 ஆம் ஆண்டிற்கான டெக்னீசியன், டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026,Dated 21.05.2026
பணி: Technical Officer(Physics/Electronics)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.89,268
தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல்(எலக்ட்ரானிஸ்), மின்னணுவியல் மற்றும் கருவியியல்(எலக்ட்ரானிஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல், மின் மற்றும் மின்னணுப்பொறியியல்(எலக்ட்ரானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய ஏதாவொரு பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்
பணி: Technical Officer (Computer Science)
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ. 89,268
தகுதி: பொறியியல் துறையில் கனிணி அறிவியல் பிரிவில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician(I)
பிரிவு : Electronic Mechanics
காலியிடங்கள்: 6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Electrician/Wireman/Electrical Fitter
காலியிடங்கள்:6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Mason(Building Constructor)Electrician/ Wireman/Electrical Fitter
காலியிடம் : 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician-Draughtsman (Civil)
காலியிடம் : 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman Civil பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ceeri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.