உதவித்தொகையுடன் ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
தென் கிழக்கு மத்திய ரயில்வேயிக்கு சொந்தமான பணிமனைகளில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...
தென் கிழக்கு மத்திய ரயில்வேயிக்கு சொந்தமான பணிமனைகளில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன் விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: P/NGP/SAS/2024/16
Advertisement
Advertisement
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 1079
வயது வரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 19-05-2026 தேதி யன்று உள்ளபடி கணக்கிடப்படும்.
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவ தொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். தகுதியானவர்களைத் தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப் பிக்கத் தேவையான கூடுதல் விபரங்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.6.2026.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
South Eastern Central Railway Apprenticeship training in the ITI graduates..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.