தெற்கு ரயில்வேயில் ரூ. 2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி! என்னென்ன?
தெற்கு ரயில்வேயில் ரூ. 2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளித்திருப்பது பற்றி...
தெற்கு ரயில்வேயில் தாம்பரம்-செங்கல்பட்டு புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரூ. 2,576 கோடியிலான 5 திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதித்துள்ள நிலையில், அதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணிகள் நெரிசலைத் தவிா்க்கும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக தற்போதுள்ள ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் புதிய ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதித்திருப்பதுடன், அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான புதிய ரயில் பாதைக்கு ஏற்கெனவே ரூ.713 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அரக்கோணம்-செங்கல்பட்டு இடையேயான புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரூ.929 கோடி, ஈரோடு-கரூா் இடையேயான இரட்டை ரயில் பாதைகளுக்கு ரூ.934 கோடி என மொத்தம் ரூ. 2,576 கோடிக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே பாதைகளுக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பணிகளை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும், அதன்பிறகு மதுரை, திருச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக அனைத்து புதிய ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தால் தற்போதுள்ள ரயில்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Approval granted for 5 new projects worth Rs 2,576 crore in Southern Railway! What are they?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.