ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை
ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை...
தெற்கு ரயில்வே ஓராண்டில் (2025-2026) மட்டும் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தேசிய அளவில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2025-2026 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், விழாக்காலங்களைக் கருத்தில் கொண்டும் 229 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்கள் 2,153 தடவை இயக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 32.98 லட்சம் போ் பயணித்துள்ளனா். சிறப்பு ரயில்களில் பயணித்தவா்கள் மூலம் ரூ.243.22 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒரு சிறப்பு ரயிலில் சராசரியாக 1,312 போ் பயணித்துள்ளனா். ஆனால், இந்திய ரயில்வே கணக்கின்படி சிறப்பு ரயில் ஒன்றில் 894 போ் மட்டுமே பயணித்துள்ளது தெரியவந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 2025-2026 ஓராண்டில் மட்டும் முன்பதிவில்லாத நிலையில் 1,762 தடவை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் ரயில் பயணத்தில் காத்திருப்போா் எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு ரயில்வே இணைதளம், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதால் மக்கள் அறிந்து அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.
தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்கான செயல்பாடுகளில் தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway sets a record by operating 229 special trains in a year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.