திருநெல்வேலி - தாம்பரம் இடையே 6 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள்
பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி-தாம்பரம் இடையேயும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
வரும் 13, 20 மற்றும் 27 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06070) வரும் 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 10.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06069) மறுநாளான 15, 22, 29 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி நிலையத்தைச் சென்றடையும்.
சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டி, 6 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி மூன்றடுக்கு பொருளாதாரப் பெட்டிகள், 7 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டி மற்றும் சரக்கு, பிரேக் வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீ ரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக. 6) காலை முதல் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.