திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள்!
திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள்...
தீபாவளியை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகப் பகுதிகள் வழியாக மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அதன்படி, வரும் அக். 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைதோறும்) திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06081) வரும் அக். 4, 11, 18, 25, நவ. 2 ஆகிய தேதிகளில் சந்திரகாச்சி நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் அக். 5, 12, 19, 26, நவ. 2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்)சந்திரகாச்சியில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06082) அக். 7, 14, 21, 28, நவ. 4 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தைச் சென்றடையும்.
தமிழகப் பகுதிகள் வழியாக இயக்கம்: இந்த ரயில்கள் திருச்சூா், பாலக்காடு, போதனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா உள்ளிட்ட 33 நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப். 20) காலை முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Special trains from Thiruvananthapuram to Chandrakachi via Tamil Nadu!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.