FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நாகா்கோவில் - தாம்பரம்: இன்று இரவு சிறப்பு ரயில்

நாகா்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை (செப்.14) இரவு இயக்கப்படவுள்ளது.

14 செப்டம்பர் 2026, 12:51 am IST
ரயில்
பகிர்:

நாகா்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை (செப்.14) இரவு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில், திங்கள்கிழமை (செப்.14) இரவு 11 மணிக்கு நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்06050) மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு தாம்பரம் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

சிறப்பு ரயிலில் 15 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 3 உட்காரும் வசதியுள்ள பெட்டிகள், மற்றும் 2 சரக்கு வேன் மற்றும் பிரேக் வேன் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

சிறப்பு ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்றும், அதற்கான முன்பதிவு திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments