முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பவர்கிரிட் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழிற்பழகுநர் பயிற்சி தொடர்பாக...

Updated On : 11 மார்ச், 2026 at 9:31 AM
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்
பகிர்:

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழிற்பழகுநர் பயிற்சிகளுக்கு ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படிகின்றன.

அறிவிப்பு எண். Apprenticeship / 2025-26/SR-11/02

மொத்த காலியிடங்கள்: 188

பயிற்சி: Trade App-rentice

பிரிவு: Electrical

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.13,500 வழங்கப்படும்.

பயிற்சி: Diploma Apprentice

பிரிவுகள்: Civil,Electrical

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பயிற்சி: Graduate Apprentice

பிரிவு: Civil, Electrical,HR,CSR

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எச்ஆர் பிரிவிற்கு எம்பிஏ(எச்ஆர்) பட்டமும், சிஎஸ்ஆர் பிரிவிற்கு எம்எஸ்டபுள்யு முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.17,500 வழங்கப்படும்.

அனைத்து பயிற்சிகளுக்கும் 12.3.2024-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் www.nats.education.gov.in இணையதளத்திலும், ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதளத்திலும் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்யத பின்னர் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 113.2026

summary

POWERGRID Job Opportunities...

முழு கட்டுரையைப் படிக்க →