அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணி
அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...
அண்ணா பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்ல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விவரம் வருமாறு:
பணி: Project Assistant
Advertisement
Advertisement
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, எம்இ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்து செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Dr. P. Somasundaram, Professor, Department of Electrical and Electronics Engineering, College of Engineering Guindy, Anna University, Chennai-600 025.
இ-மெயில் முகவரி: mpsomasun daram@annauniv.edu/somu au77@gmail.com.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.5.2026
Application are invited from eligible candidates for the temporary post of Project Assistant to be engaged in a project titled...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.