முகப்பு
அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.50,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 8 அக்டோபர் 2022, 12:00 pm IST
பகிர்:


திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இரவு காவலர் - 5
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 27
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 62,000
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்  ஆர்வமும் உள்ளவர்கள்
www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் ரூ.30க்கான தபால் தலை ஓட்டப்பட்ட தபால் கவரையும்(அளவு 10 X 4 இன்ஞ்சஸ்) இணைத்து அதில் தங்களது முகவரி எழுதி அனுப்ப வேண்டும். 

திண்டுக்கல் மாவட்ட சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 14.10.2022

மேலும் விவரங்கள் அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments