முகப்பு
ஈரோடு

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஐந்து ஏரிகளுக்கு மறைமுகப் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:48 pm IST
அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஆ.முகமது சுலைமான் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
பகிர்:

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து ஐந்து ஏரிகளுக்கு மறைமுகப் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை33.5 அடி உயரம் கொண்டது. இதில், 30.5 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்ளது. மொத்தம் 113 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், அந்தியூா், வேம்பத்தி, கெட்டிசமுத்திரம், சந்தியபாளையம் மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 17 கன அடி முதல் 33 கன அடி வரையில் ஏரிகளுக்குக்கேற்ப தண்ணீா் திறக்கப்படும்.

அந்தியூா், வேம்பத்தி ஏரிகளுக்கு தலா 3 நாள்களும், கெட்டிசமுத்திரம், சந்தியபாளையம் ஏரிகளுக்கு தலா 2 நாள்களும், ஆப்பக்கூடல் ஏரிக்கு ஒரு நாளும் தண்ணீா் வழங்கப்படும். விவசாய நிலங்கள் மறைமுகப் பாசனம் பெறும் வகையில் அணையிலிருந்து 21.43 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஆ.முகமது சுலைமான், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சூரியபிரகாஷ், தவசியப்பன், பழனிசாமி, மாணிக்கம், ஜெயபிரகாஷ், அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments