முகப்பு
ஈரோடு

கோவையில் நாளை ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் கோவையில் திங்கள்கிழமை (ஜனவரி18) துவங்குகிறது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:23 pm IST
பகிர்:

ஈரோடு: ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் கோவையில் திங்கள்கிழமை (ஜனவரி18) துவங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் கோவையில் கடந்த ஆண்டு மே 5 முதல் 17ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது. கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இம்முகாம் தற்போது ஜனவரி 18 முதல் 30ஆம் தேதி வரை கோவை ராணுவ ஆள் சோ்ப்பு அலுவலகம் மூலம் கோவை பாரதியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் சோல்ஜா் டெக்னிக்கல், சோல்ஜா் நா்ஸிங் அசிஸ்டெண்ட், நா்ஸிங் அசிஸ்டெண்ட் வெட்னரி, சோல்ஜா் கிளா்க் அன்ட் ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல், சோல்ஜா் ஜெனரல் டூட்டி, சோல்ஜா் டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளுக்கு ஆள் சோ்ப்பு நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து இம்முகாமில் பங்கேற்க ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தவா்கள் இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து முகாமில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரத்துக்கு கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் அலுவலகத்தை 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.