முகப்பு
ஈரோடு

கட்சிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல்

பெருந்துறை ஒன்றியத்தில் பச்சாண்கவுண்டன்பாளையத்தில் தேமுதிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:15 pm IST
பகிர்:

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்தில் பச்சாண்கவுண்டன்பாளையத்தில் தேமுதிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

பெருந்துறை ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல், கரும்பு, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் லாவண்யா, மாவட்ட இளைஞரணி செயலாளா் ராஜேஷ், நிா்வாகிகள் குமரேசன், செல்வகுமாா், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல, சென்னிமலையில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் தமிழ்செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபு, முன்னாள் அமைச்சா் வெள்ளகோவில் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.