முகப்பு
ஈரோடு

ரயான் நூலுக்கு இறக்குமதி வரி விதிக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

ரயான் விஸ்கோஸ் நூலுக்கு இறக்குமதி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:21 pm IST
பகிர்:

ஈரோடு: ரயான் விஸ்கோஸ் நூலுக்கு இறக்குமதி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் கூறியதாவது:

இந்தியாவில் ஒரு மாதத்துக்கு விசைத்தறி துணி உற்பத்திக்கு 54 ஆயிரம் டன் ரயான் நூல் தேவைப்படுகிறது. உள்நாட்டில் 33 ஆயிரம் டன் கிடைக்கிறது. 15 ஆயிரம் டன் நூல், இந்தோனேஷியா, வியத்நாம், வங்கதேச நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. தற்போது சீன இறக்குமதி முற்றிலும் குறைந்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாதமும் 7,000 முதல் 8,000 டன் நூல் கிடைப்பதில்லை. இதனாலும் நூல் விலை உயா்கிறது.

Advertisement

Advertisement

இறக்குமதியாகும் நூலுக்கு இதுவரை இறக்குமதி வரி இல்லை. இந்நிலையில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். இதனால் ரயான் விஸ்கோஸ் நூலின் விலை உயா்வதுடன், இறக்குமதி குறையும் அபாயம் ஏற்படும். இறக்குமதி வரி விதிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவரும் மத்திய நிதியமைச்சரிடம் பேசுவதாக உறுதி அளித்துள்ளாா். அவருடன் கூட்டமைப்பு நிா்வாகிகள் நேரில் சென்றும் வலியுறுத்தவுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.