7.7.1976: விண்வெளியில் இருவரை ரஷியா செலுத்தியது
விண்வெளியில் இருவரை ரஷியா செலுத்தியது பற்றி...
மாஸ்கோ, ஜூலை. 6- ரஷியா இன்று இரு மனிதர்களை விண்வெளியில் செலுத்தியது.
ஜூலை 22ம் தேதி செலுத்தப்பட்டு பூமியை சுற்றிவரும் "சல் யூட்- 5 என்ற கலத்தில் அவர்கள் புகுவார்கள் என கருதப்படுகிறது.
சோயுஸ்- 21 என்ற விண்வெளிக் கப்பலில் போரிஸ் வாலினாவும், விடாலி ஜோலபாவும் செலுத்தப்பட்டனர். இது வாலினாவுக்கு இரண்டாவது விண்வெளிப் பயணமாகும்.
Advertisement
Advertisement
இன்று மாலை 5-30 மணிக்கு (இந்திய நேரம்) அவர்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டதாக டாஸ் கூறியது.
மதியழகன், ராஜேந்திரன், பண்ருட்டி, நாராயணசாமி தி.மு.க.விலிருந்து “சஸ்பெண்ட்”
சென்னை, ஜூலை. 6 - திராவிட முன்னேற்றக் கழக சாதாரண அங்கத்தினர் பதவியிலிருந்து தி.மு.க. செயற்குழு அங்கத்தினர்களான கே.ஏ. மதியழகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, பொதுக் குழு அங்கத்தினர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கழகத்தின் முடிவை அறிவித்து பொதுச்செயலாளர் இரா.நெடுஞ்செழியன் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டை "மீறியதாக"வும் ஜூலை 3ந் தேதி நடந்த தி.மு.க. செயற்குழு அமைதியாக நடைபெற்றிருந்தும் உண்மைக்கும் மாறாகவும், நடைபெறாத நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக புனைந்து அறிக்கை என்ற பெயரால் குழப்பத்தை உருவாக்கி வெளியிட்ட செயலில் ஈடுபட்டதாகவும், பிறகு பத்திரிகை அறிக்கைகள் மூலம் கட்சி அங்கத்தினர்களிடையே "குழப்பத்தையும் பிணக்கையும்" ஏற்படுத்தியதாகவும் இந்த நான்கு அங்கத்தினர்கள் மீது இந்த நடவடிக்கையை கழகத் தலைமை மேற்கொண்டிருப்பதாக நெடுஞ்செழியன் கூறியிருக்கிறார்.
இந்த 4 அங்கத்தினர்களும் கட்சிப் பதவிகளனைத்திலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதகாவும், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை பற்றி விரைவில் இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Russia sent two people into space
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.