முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

20.6.1976: சென்னை சுரங்க ரயில் திட்டம் இப்போதில்லை?

சென்னை சுரங்க ரயில் திட்டம் ஒத்திவைப்பு பற்றி...

Updated On : 20 ஜூன் 2026, 4:00 am IST
20.6.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஜூன். 18 - சென்னை மாநகருக்கான துரித போக்குவரத்து திட்டம் (சுரங்க ரயில் திட்டம்) தற்போதைக்கு கிடப்பில் போடப்படலாம் என்று தோன்றுகிறது.

அதற்குப் பதிலாக சென்டிரல் ஸ்டேஷனுக்கும்; திருவல்லிக்கேணிக்கும் இடையில் ரயில் போக்குவரத்துக்கான சிறிய திட்டம் ஒன்றை ரூ. 15 கோடி செலவில் நிறைவேற்றுவது பற்றி ஆய்வு நடத்துமாறு மாநகரப் போக்குவரத்து திட்டப் பிரிவு (ரயில்வே) கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

திருவான்மியூருக்கும், திருவொற்றியூருக்குமிடையில் ரூ.140 கோடி செலவில் ரயில் பாதையமைப்பு திட்டமொன்றை சென்ற நவம்பரிலேயே ரயில்வே இலாகா அங்கீகரித்திருக்கிறது. இந்தத் திட்டம் அவசியமானது என்று திட்டக் கமிஷனிடம் திட்டவட்டமாக சிபாரிசு செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறு பற்றிய ஆய்வுக்காக ஏற்கனவே ரூ. 85 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

ஆனால், நிதி வசதிக் குறைவு காரணமாக திட்டக் கமிஷனால் இதற்கு அனுமதி வழங்க முடியவில்லை.

சென்னையில் பல்வேறு முனைகளில் போக்குவரத்து இக்கட்டுகளைச் சமாளிப்பதற்காக இணைப்பு குழு ஒன்றை திட்டக் கமிஷன் இப்போது அமைக்கிறது. இதில் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். மத்திய பணி ஜாகை வசதி துறை காரியதரிசி இதன் தலைவராயிருப்பார்.

சென்டிரல்- திருவல்லிக்கேணி ரயில் பாதை திட்டம், மற்றும் பிராட்கேஜிலும், மீட்டர்கேஜிலும் தற்போதுள்ள புறநகர் ரயில் போக்குவரத்து வசதிகளை பலப்படுத்துவது; ஜனத்தொகையை இன்னும் சிறந்த முறையில் பரவலாக மாற்றியமைப்பது ஆகியவை குறித்தும் இந்த குழு ஆய்வு நடத்தும். மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகளை அதிகபட்ச அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் அது பரிசீலிக்கும். ...

தெ. ஆ. பார்லிமெண்டில் கருப்பருக்கு பிரதிநிதித்வம் தர யோசனைக்கு அரசு மறுப்பு

கேப்டவுன், ஜூன். 18 - தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களும் வெள்ளையர்களல்லாதாரும் திருமணம் செய்து கொள்வதற்கு உள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட கமிஷன் ஒன்று கூறியிருக்கிறது.

கமிஷனின் அறிக்கை இன்று தென்னாப்பிரிக்கா பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் கருப்பு இன குடிமக்களுக்கு பார்லிமெண்டில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. தற்போது பார்லிமெண்டில் வெள்ளையர்கள் மட்டுமே மெம்பர்களாக இருக்கிறார்கள்.

அடுத்த வாரம் அறிக்கை விவாதத்துக்கு வரும். 18 மெம்பர்கள் கொண்ட ஒரு கமிஷன் 3 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது. இந்தக் கமிஷனில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

அரசாங்க மறுப்பு

உடனடியாக அரசாங்கம் இது குறித்துத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கறுப்பருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மறுத்திருக்கிறது.

கலப்பு இனங்கள் திருமணச் சட்ட விஷயத்திலும் தனது நிலையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்று அரசாங்கம் கூறிவிட்டது. ...

summary

20.6.1976: No Chennai underground railway project for now?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments