மருத்துவம்

குடற்புண்களால் சிரமப்படுபவர்களுக்கு உகந்த கசாயம்

தினமணி

குடற்புண்களால் மிகவும் சிரமப்படுபவர்கள் வெந்தயக் கீரை  உளுந்துக் கசாயத்தை குடித்து பலனடையுங்கள். 

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை.         -   ஒரு கையளவு

கருப்பு உளுந்து.          -    10 கிராம்

மஞ்சள் தூள்.               -   சிறிதளவு


செய்முறை

வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.  உளுந்தை லேசாக வறுத்து நன்கு உடைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை மற்றும் உடைத்த உளுந்து மற்றும் சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்த்து  நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்தப் பின்பு நீரை  100 மி.லி அளவாக  சுண்டவைத்து   இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

குடற்புண்களால் சிரமப்படுபவர்கள் இந்த வெந்தயக் கீரை உளுந்து கசாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் குடற்பகுதியில் உண்டாகும் புண்களை குணமாக்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT