செய்திகள்

நூலகத்தில் தங்கும் பல் மருத்துவ மாணவர்கள்: அடிப்படை வசதி கோரி போராட்டம்

தினமணி

விடுதிகள் கட்டப்படாமல் அரசு பல் மருத்துவ மாணவர்கள் நூலகம் மற்றும் கலையரங்கத்தில் தங்கி வருவதால், அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டனர்.
ஆனால், இதுவரை அவர்களுக்கென்று தனி விடுதி கட்டப்படவில்லை. மேலும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி கல்லூரி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாணவர்கள் கூறியது: சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறிய பின், முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் பல் மருத்துவக் கல்லூரியின் பழைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
அந்த வளாகத்தில் உள்ள பழைய நூலகத்திலும், கலையரங்கத்திலும் தங்கியிருக்கிறோம். எங்களுக்கு தனி விடுதி வசதி இல்லை. 42 மாணவர்களுக்கு 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. மாதம் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தியும் உணவு, விடுதி பராமரிப்பு என்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றனர்.
மாணவிகள் கூறுகையில், பல் மருத்துவ மாணவிகளுக்கு என்று தனி விடுதி இருந்தாலும், அங்கு கழிவறை வசதிகள் முறையாக இல்லை.
சுத்திகரிக்கப்படாத தண்ணீர்தான் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது. புழுக்களும், பூச்சிகளும் கிடக்கும் மாசடைந்த தண்ணீரில்தான் குளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என்றனர்.
இதனையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயண பாபு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT