முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: கொண்டைக்கடலை

உடல் எடை குறைய

Updated On : 18 நவம்பர் 2017, 12:00 am IST
பகிர்:


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கொண்டைக்கடலை:

  • வயிற்றுப் பொருமல் , சிறுநீர் எரிச்சல் தீர கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை (10கிராம்) அளவுக்கு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
  • தலைவலி , தலைப் பாரம் நீங்க கொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வந்தால் இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
  • உடல்பெருக்க , ஆண்மை அதிகரிக்க கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பெருக்கும். ஆண்மை அதிகரிக்கும். சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.
  • மகளிருக்கான பிரச்சனைகள் தீர ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும். மேலும் இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.
  • உடல் எடை குறைய கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
  • மலச்சிக்கல் தீர கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனைகள் அகலும். முக்கியமாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


முக்கிய குறிப்பு : 
வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளவது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும், எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
 

Advertisement

Advertisement

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments