அர்கன்சாஸ் தமிழ் சங்க தீபாவளி திருநாள் விழா
அமெரிக்காவில் அர்கன்சாஸ் மாநிலத்தின் தலைநகர் லிட்டில்ராக் நகரில் தீபாவளித் திருநாள் "அர்கன்சாஸ் தமிழ் சங்கம்" சார்பில் கொண்டாடப்பட்டது. மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
அமெரிக்காவில் அர்கன்சாஸ் மாநிலத்தின் தலைநகர் லிட்டில்ராக் நகரில் தீபாவளித் திருநாள் "அர்கன்சாஸ் தமிழ் சங்கம்" சார்பில் கொண்டாடப்பட்டது. மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு உமா மற்றும் ரமாவின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா துவங்கியது.
லலிதா சுவாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாவளி திருநாள் விழாவை துவக்கி வைத்தார். தலைவர் மகிழ் இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
Advertisement
Advertisement
பின்னர் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்சி நடைபெற்றது.
மிரக்ளின்,வேது,மோனு மற்றும் ஜெஸ்ரின் ஆகிய சிறார் நடனம், நிவியின் நடனம், சுருதி,மஞ்சு,கீதா மற்றும் ரம்யாவின் நடனம், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பிரித்திகா மற்றும் சிறீகாவின் குழுநடனம் எல்லோரையும் கவர்ந்தது.
சிரிப்புக்கடலில் ஆழ்த்திய பொடிசுகள் ரீத்தா,ஸ்ரேயா,தண்ட்ரா நடனம் ரசிக்கும்படியாக இருந்தது. சிறீயின் பரதநாட்டியம் பலத்த கரகோசங்களைக் கிளப்பியது.
செல்வி மிராக்ளின் தேர்ந்த பாடகரைப்போல் பாடி அசத்தினார். மீனாச்சி சுந்தரம் மற்றும் ரம்யாவும், மீனாச்சி சுந்தரமும் மோனுவும் இணைந்து பாடி தூள் கிளப்பினர்.
இவர்களைத் தொடர்ந்து தேனிசை மழையாக பாடிய கற்பகம்,இணைந்து பாடிய சிறீனி மற்றும் ஜெயந்தி ஆகியோர் பிரபல பின்னனி பாடகர்களை மிஞ்சும்வகையில் பாடி விழா அரங்கம் அதிர கரகோசங்களை பரிசாகப்பெற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தமிழ் கல்வி மற்றும் கலாச்சார வகுப்புகளுக்கு 100 விழுக்காடு வருகைதந்த மாணவர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாத இதழில் சிறப்பாக பங்களித்த சிறுவர்களுக்கும் திருமதி சசிகலா சிரீகாந்தன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்சிகளை உலகநாதன் ஈஸ்வரன், மாஸ்டர் அஸ்வின் சுவாமிநாதன், மாஸ்டர் சிரேயஸ் சிரினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். செயலாளர் மீனாச்சிசுந்தரம் நன்றி நவில தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக நிறைவெய்தியது. பின்னர் அனைவரும் பட்டாசுகள் கொளுத்தி தீபாவளியின் உச்சபட்ச மகிழ்ச்சியைக் கொண்டாடினர்
விழா ஏற்பாடுகளை தலைவர் மகிழ் இராஜேந்திரன், துணைத்தலைவர் சீனிவாசன் கோபிநாதன், செயலாளர் மீனாச்சிசுந்தரம், பொருளாளர் லெனின் ரெத்தினசுவாமி, இணை பொருளாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தினர்.