FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென்னிந்திய மாநிலங்கள் மீது விழுமா?

பூமியை நோக்கி வரும் சூரிய துகள்கள் தென் மாநிலங்கள் மீது விழுமா என்பது பற்றி..

Updated On : 8 ஜூன் 2026, 12:05 pm IST
சூரிய உதயம் - பிரதி படம் - ANI
பகிர்:

சூரியனில் நிகழ்ந்த ஒரு மாபெரும் சூரிய வெடிப்புக் காரணமாக வௌயின சூரிய துகள்கள் அல்லது நெருப்புத் துகள்கள் மிக வேகமாக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

அந்த சூரிய துகள்கள் இன்று பூமிக்குள் விழலாம் என்று நாசா எச்சரித்துள்ளது. இவற்றால் தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

பூமி மீது ஜி3 புவிகாந்தப் புயல் ஏற்படும் என நாசா வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், வட இந்தியா பகுதிகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளில் சூரிய நெருப்புத் துகள்கள் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சில சூரிய துகள்கள் பூமிக்கு அருகே வந்து அகண்டுவிட்டது, சில துகள்கள் பூமியின் புவிஈர்ப்பு விசை காரணமாக பூமிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த சூரிய துகள்கள் பூமிக்கு அருகில் நெருங்கி வந்தால், பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வலுவான புவிக்காந்தப் புயல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூரிய துகள்கள் பூமிக்குள் விழும்போது, வட இந்திய மாநிலங்களிலிருந்து, வானியல் ஒளிப்பிழம்புகளின் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சூரிய வெடிப்பு என்பது, சூரியனின் மேற்பரப்பில் திடீரென ஏற்படும் சூரிய அலைகளின் சீற்றத்தால் உருவாகும் வெடிப்பாகும். இதிலிருந்து மிகப்பெரிய காந்த சக்தி வெளியாகும்.

அண்மையில் சூரிய வெடிப்பில் உருவான சூரிய துகள்கள் மிக அடர்த்தியாக, காந்தபுலத்துடன் பூமியை நோக்கி வருகின்றன. அந்த துகள்கள் கூட்டம் தற்போது வினாடிக்கு சுமார் 1,400 கிலோமீட்டர் வேகத்தில் சூரிய மண்டலத்தின் உள்பகுதியைக் கடந்து வருகிறது. அது இன்று பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் விண்வெளி வானிலை ஆய்வு மையமானது சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து, பூமியில் ஜி3 காந்தப் புயல் குறித்த எச்சரிக்கைகை வெளியிட்டது.

அரோரா என்று அழைக்கப்படும் வடதுருவ ஒளிகள், பூமியின் வெளிப்பரப்பில் இருக்கும் வாயுக்கள் மீது விழும்போது, அங்கிருந்து பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிற திரைகள் விழுவது போன்று ஒளிரக்கூடும் என கூறப்படுகிறது.

கூட்டமான சூரிய துகள்கள் வேகமாக, மிக கடினமாக பூமியின் மீது மோதி உருவாகும் இந்த அற்புத நிகழ்வை, திங்கள்கிழமை இரவு பலரும் காண முடியும். அப்போது மிக சக்தி வாய்ந்த காந்தப் புயல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

summary

Regarding whether solar particles coming towards Earth will fall on the southern states..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments