ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளது குறித்து...
ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அமலாக்கத்துறை தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
மிசோரம்-மியான்மர் மற்றும் திரிபுரா-வங்கதேசம் ஆகிய சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு அருகில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரிபுராவில் 49.10 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 40 கிராம் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
Advertisement
ஒரு திட்டமிட்ட எல்லை தாண்டிய கடத்தல் கும்பல், மிசோரமின் சம்பாய், சோகாவ்தார் பகுதி வழியாக மியான்மரிலிருந்து மெத்தாம்பேட்டமைனை கடத்தி வந்து, திரிபுராவில் உள்ள பெறுநர்களுக்கு விநியோகிக்கும் ஒரு திட்டமிட்ட எல்லை தாண்டிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட ரூ. 142 கோடி மதிப்பிலான பணம், பல வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
The Enforcement Directorate (ED) on Monday carried out searches at several locations across Mizoram, Tripura and West Bengal in connection with a money laundering probe linked ....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.