முகப்பு
இந்தியா

மக்களவையில் இரங்கல்

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகேஷ் காத்வி மறைவுக்கு மக்களவையில்

Updated On : 2 மார்ச் 2013, 1:16 am IST
பகிர்:

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகேஷ் காத்வி மறைவுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

முகேஷ் காத்வி(50) ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை காலையில் காலமானார். குஜராத் மாநில சட்டப்பேரவையில் 1998 முதல் 2009-ம் ஆண்டு வரை மூன்று முறை உறுப்பினராக இருந்துள்ளார்.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் முகேஷ் காத்வி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

"சமூக சேவகரும், அரசியல் பிரமுகருமான முகேஷ் காத்வி, மக்களின் கல்வித்தர  மேம்பாட்டுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக திறம்பட சேவையாற்றியவர்' என்று மீரா குமார் குறிப்பிட்டார்.

அவரது மறைவுக்கும், கொல்கத்தா சந்தைப் பகுதியில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 19 பேருக்கும் இரங்கல் தெரிவித்து அவையில் உறுப்பினர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.